ADDED : ஜூலை 27, 2024 01:24 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே செம்மண்கூடலை சேர்ந்த கொத்தனார் துரை, 52.
இவரை, கடந்த, 22ல், சென்னையில் வேலை செய்ய, சேலத்தை சேர்ந்த நாராயணன் அழைத்தார். அன்று சிலருடன் ரயிலில் புறப்பட்டார். துரை குறித்து அவரது மகன் சதீஷ்குமார், 25ல், நாராயணணிடம் கேட்டபோது, சென்னைக்கு வராதது தெரிந்தது. சதீஷ்குமார் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் துரையை தேடுகின்றனர்.