ADDED : செப் 27, 2025 01:50 AM
தலைவாசல் தலைவாசல், வீரகனுாரில், 24 லட்சம் ரூபாயில், நுாலகம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது நுாலகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து தலைவர் கமலா, துணைத்தலைவர் அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


