ADDED : ஜூலை 20, 2024 08:37 AM
இடைப்பாடி: இடைப்பாடி, பூலாம்பட்டி சாலையில் நேற்று மதியம், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்பிளண்டர் பிளஸ், பேஷன் புரோ பைக்குகளில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு மூட்டையில், 57 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன.
அந்த பைக்கை ஓட்டி வந்த கொங்கணாபுரம் அருகே சுண்டமேட்டூரை சேர்ந்த அருண்குமார், 31, இடைப்பாடி ஏரி சாலையை சேர்ந்த பாலமுருகன், 24, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இரு பைக்குகள், புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர்.