ADDED : ஜூன் 22, 2025 01:13 AM
மேட்டூர், மேட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் தமிழரசன், 25. தொட்டில்பட்டி, கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 25. நேற்று மதியம், 12:30 மணிக்கு, கருமலைக்கூடல் போலீசார், தமிழ்செல்வன் வீட்டுக்கு சென்றனர்.
உடனே தமிழ்செல்வன் தப்ப முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது, அந்தியூர் மலைப்பகுதியில் இருந்து, தமிழரசன் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, வீட்டில் விற்க வைத்திருந்ததாக தெரிவித்தார். இதனால், 1.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தமிழரசன், தமிழ்செல்வனை கைது செய்தனர்.


