/உள்ளூர் செய்திகள்/சேலம்/தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைதுதேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது
தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது
தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது
தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது
ADDED : பிப் 25, 2024 03:59 AM
ஏற்காடு: ஏற்காடு, கீரைக்காடு புத்துாரில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார், 36, சின்னக்குழந்தை, 70, ஆகியோர் நுழைந்து தேக்கு மரக்கிளையை, வெட்டி திருட முயன்றனர்.
எஸ்டேட் நிர்வாகத்தினர், இருவரையும் பிடித்து, ஏற்காடு போலீசில் ஒப்படைத்தனர். மேல் புலியூர் கொளபுடி காட்டை சேர்ந்த குப்பன், மரத்தை வெட்ட சொன்னதாக தெரிவித்தனர்.
இதனால் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர். இதில், முத்துக்குமார், சின்னக்குழந்தையை கைது செய்த போலீசார், குப்பனை தேடுகின்றனர்.