ADDED : மே 04, 2026 03:16 AM
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி செட்டிச்சாவடியை சேர்ந்தவர் சீரங்-கம்மாள், 58. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த ஏப்., 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின் வீடு திரும்-பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மகன் முனி-யப்பன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 51. மனநலம் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் உள்ளார். இவரது மாமனார் வீடு, சேலம், அம்மாபேட்-டையில் உள்ளது. கடந்த ஏப்., 29ல் சேலம் வந்த செந்தில்குமார், அங்கிருந்து வெளியே சென்றார். பின் திரும்பி வரவில்லை. இது-குறித்து அவரது சகோதரர் அருணாசலம் புகார்படி, அம்மா-பேட்டை போலீசார் தேடுகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்-தவர் அஞ்சலி, 35. இவருக்கு திருமணமாகி, கணவருடன் கருத்து வேறுபாடால் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் வசித்துக்-கொண்டு, சிவதாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரி-கிறார். கடந்த, 2ல் வேலைக்கு சென்ற அவர், வீடு திரும்ப-வில்லை. சகோதரர் சுபாஷ் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
