ADDED : அக் 13, 2025 03:25 AM
ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளை யம் தெற்கு ஒன்றியம், வைத்தியகவுண்டன்புதுாரை சேர்ந்த, 50 பேர், தி.மு.க.,வில் இருந்து விலகினர்.
அவர்கள், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, ஆத்துாரில் நேற்று நடந்தது. அதில், 50 பேரும், அ.தி.மு.க.,வில் இணைந்த நிலையில், கட்சி, தேர்தல் பணியை ஆர்வத்துடன் மேற்கொள்ள, இளங்கோவன் அறிவுறுத்தினார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


