/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதுமையை வரமாக ஏற்று மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்: இறையன்பு முதுமையை வரமாக ஏற்று மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்: இறையன்பு
முதுமையை வரமாக ஏற்று மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்: இறையன்பு
முதுமையை வரமாக ஏற்று மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்: இறையன்பு
முதுமையை வரமாக ஏற்று மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்: இறையன்பு
ADDED : செப் 25, 2025 02:09 AM
சேலம், :தமிழ்நாடு ஓய்வு பெற்ற வேளாண் பொறியாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், சேலம், சேகோசர்வ் அருகே நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார்.
அதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, 'மகிழ்வு தரும் முதுமை' எனும் தலைப்பில் பேசியதாவது:
தலைமுறை இடைவெளி என்பதை யாராலும் மாற்ற முடியாது. உங்கள் செருப்புகளில் வலது கால் செருப்பு, இடது காலுக்கு பொருந்தாது. அதேபோல் உங்கள் பிள்ளைகளே என்றாலும், உங்கள் கருத்துகளை ஏற்பர் என்ற எண்ணம் கூடாது. முதுமையில், முடிந்தவரை வெளியிடங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொள்ளுங்கள். இசை, ஓவியம், கவிதை, கதை, நாணய சேகரிப்பு என, உங்களுக்கு பிடித்த விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். கற்க வயது தடை கிடையாது. உங்கள் வேலைகளை நீங்களே செய்ய முயற்சியுங்கள். முதுமையை வரமாக ஏற்று, மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் வாழுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
செல்லம் சிம்ஸ் மருத்துவமனையின், மூளை நரம்பியல் மருத்துவர் பாலமுருகன், உடல் நல ஆலோசனைகளை கூறினார். சேலம் மாவட்ட கருவூல அலுவலர் ஸ்ரீதர்மூர்த்தி, ஓய்வூதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டைகள், மூத்த பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுச்செயலர் பெரியசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.