Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தகுதி அற்றவருக்கு ஒப்பந்தத்தால் குடிநீர் வினியோகத்தில் குளறுபடி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தகுதி அற்றவருக்கு ஒப்பந்தத்தால் குடிநீர் வினியோகத்தில் குளறுபடி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தகுதி அற்றவருக்கு ஒப்பந்தத்தால் குடிநீர் வினியோகத்தில் குளறுபடி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தகுதி அற்றவருக்கு ஒப்பந்தத்தால் குடிநீர் வினியோகத்தில் குளறுபடி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ADDED : செப் 26, 2025 02:01 AM


Google News
சேலம், 'சேலத்தில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. தகுதி இல்லாதவருக்கு, 11 கோடி ரூபாயில் ஒப்பந்தம் விட்டு, குழாய் பராமரிப்பு பணிகளை ஒப்படைத்ததே இதற்கு காரணம்' என குற்றம்சாட்டி, மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

தெய்வலிங்கம் (தி.மு. க.,): மாநகராட்சியில் நாய்களுக்கு செய்யப்படும் கருத்தடையை, கலெக்டர் உத்தரவுப்படி, சில மாதங்கள் நிறுத்தியதால், இன்று தெருநாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

தற்போது மீண்டும் ஒரு அமைப்பு, கருத்தடை செய்வதால் நாய்கள் இறப்பதாகவும், அதை நிறுத்த வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளது. இங்கு நாய்களை விட மனித உயிர் முக்கியம் என்பதால், கமிஷனரிடம் ஆலோசித்த பின், அறுவை சிகிச்சையை நிறுத்த, கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

வரதராஜ் (அ.தி.மு.க.,): என் வார்டில் குடிநீர் வந்து, 11 நாட்களாகிறது. எப்போது கேட்டாலும் குழாய் உடைந்துவிட்டது என, அதிகாரிகள் சாக்கு சொல்கின்றனர். பக்கத்து வார்டுகளில், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. அங்கு இந்த பிரச்னை இல்லையா?

சசிகலா (அ.தி.மு.க.,): முனியப்பன் கோவில் தெருவில் சாக்கடை வசதின்றி அவதிப்படுவதாக, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டது முதல், 4 ஆண்டாக கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது கேட்டாலும், 'எஸ்டிமேட்' போட்டுள்ளது என்றே கூறுகின்றனர். பள்ளப்பட்டி ஏரி, மக்கள் வரிப்பணத்தில் பல கோடிகளை செலவிட்டு சீரமைக்கப்பட்டும், பலனின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதையும் பல முறை வலியுறுத்திவிட்டேன். நடவடிக்கை இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி (அ.தி.மு.க.,): வ.உ.சி., மார்க்கெட், பெரியார் பேரங்காடி குத்தகை விட்டதில் மொத்த நிலுவை தொகை எவ்வளவு? கோடிக்கணக்கில் நிலுவை வைத்தும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்ப, தண்ணீர் இருந்தும், சேலத்தில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. தகுதி இல்லாதவருக்கு, 11 கோடி ரூபாயில் ஒப்பந்தம் விட்டு, குழாய் பராமரிப்பு பணிகளை ஒப்படைத்ததே இதற்கு காரணம். இதை கண்டித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்கிறது.

தொடர்ந்து யாதவமூர்த்தி, ஜனார்த்தனன், மோகனப்ரியா, சந்திரா உள்ளிட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர். இதையடுத்து தீர்மானம் வாசிக்கப்பட்டு, கூட்டம் முடிந்தது. கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

வருவாய் இழப்பு: தி.மு.க., கவுன்சிலர் வருத்தம்

மாநகராட்சி கூட்டத் தில், தி.மு.க., கவுன்சிலர் குணசேகரன் பேசியதாவது: வ.உ.சி., மார்க்கெட்டில், டிரில்லர் வைத்து சுவரை உடைத்துள்ளனர். ஏலம் எடுத்தவர், தனிப்பட்ட முறையில் அத்துமீறி செயல்படுகிறார். பல கோடி ரூபாயில் கட்டடம் கட்டியும், இன்றும் நடைபாதை கடைகள் அப்படியேதான் உள்ளன. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் வரை வியாபாரிகளிடம் வசூலித்த நிலையில் மீண்டும் கடைகளுக்கு, 3 முதல், 4 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். மாநகராட்சி வருவாய் தடுக்கப்படுவதோடு, இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us