/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை சக டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை சக டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை சக டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை சக டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை சக டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ADDED : செப் 25, 2025 02:43 AM
சேலம், ஆட்டோவை நிறுத்தி பயணியரை ஏற்றியது குறித்து ஏற்பட்ட தகராறில், டிரைவரை அடித்துக்கொன்ற சக ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், பொன்னம்மாபேட்டை, ரயில்வே லைன், வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 26. சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அம்மாபேட்டைக்கு, ேஷர் ஆட்டோ ஓட்டி வந்தார். 2022 செப்., 21 மதியம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தபால் நிலையம் முன்,
ஆட்டோவை நிறுத்தி பயணியரை ஏற்றியுள்ளார்.
இதனால் அங்கு ஆட்டோ நிறுத்தி காத்திருந்த, அல்லிக்குட்டையை சேர்ந்த டிரைவர் கவுதம், 24, மணிகண்டனை திட்டியுள்ளார். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த கவுதம், ஆட்டோ சக்கரம் கழற்றும் ஸ்பேனரால், மணிகண்டன் தலையில் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், செப்., 27ல் உயிரிழந்தார். சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கவுதமை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கவுதமுக்கு ஆயுள் சிறை தண்டனை, 10,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி வேலரஸ், நேற்று உத்தரவிட்டார்.