/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாநாடுக்கு செல்வோரை தடுக்கும் போலீஸ் பா.ஜ., மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு மாநாடுக்கு செல்வோரை தடுக்கும் போலீஸ் பா.ஜ., மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு
மாநாடுக்கு செல்வோரை தடுக்கும் போலீஸ் பா.ஜ., மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு
மாநாடுக்கு செல்வோரை தடுக்கும் போலீஸ் பா.ஜ., மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு
மாநாடுக்கு செல்வோரை தடுக்கும் போலீஸ் பா.ஜ., மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 19, 2025 01:34 AM
சேலம், ''சூரனை வதம் செய்தது போல், 2026ல், தி.மு.க.,வை முருகன் வதம் செய்வார். அதில், பா.ஜ., முருக படை வீரர்களாக இருந்து பணியாற்றுவர்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.இதுகுறித்து சேலத்தில் அவர், நேற்று அளித்த பேட்டி:
வரும், 22ல், மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாடுக்கு செல்பவர்களை தடுக்க, தமிழக அரசு போலீஸ் அதிகாரத்தை கொண்டு அராஜகம் செய்து வருகிறது. எந்த நிகழ்ச்சிக்காவது புறப்படும் இடத்திலிருந்து தடை போடப்பட்டுள்ளதா? மதுரை கிளம்ப, வாழப்பாடியில் உள்ளவர்கள் அனுமதி வாங்க வேண்டுமாம்.
போலீசாரை தவறாக பயன்படுத்தி, முருக பக்தர்கள் மாநாட்டை பங்கப்படுத்த நினைக்கின்றனர். நெருப்பை, அதிகாரம் எனும் கந்தல் துணியால் மூட நினைத்தால் என்ன நடக்கும்? அதுபோல், முருக பக்தர்கள் மாநாடு மக்களின் எழுச்சியோடு நடக்கும்.
சூரனை வதம் செய்தது போல், 2026ல், தி.மு.க.,வை முருகன் வதம் செய்வார். அதில், பா.ஜ., முருக படை வீரர்களாக இருந்து பணியாற்றுவர். இந்துக்களுக்கு எதிராக செயல்படும், தி.மு.க.,வை துாக்கி எறிவதே, பா.ஜ.,வின் நோக்கம். பக்தர்கள் கொடுக்கும் பணத்தில், 5 சதவீதம் கூட, கோவிலுக்கு செலவிடுவதில்லை. ஆறுபடை வீடுகளில் இருந்து பெறப்படும் வருமானத்தில் கோவில்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது? அறநிலையத்துறைக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என, அமைச்சர் சேகர்பாபு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.