/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 86 பேருக்கு ரத்த மாதிரி யாருக்கும் காய்ச்சல் இல்லை 86 பேருக்கு ரத்த மாதிரி யாருக்கும் காய்ச்சல் இல்லை
86 பேருக்கு ரத்த மாதிரி யாருக்கும் காய்ச்சல் இல்லை
86 பேருக்கு ரத்த மாதிரி யாருக்கும் காய்ச்சல் இல்லை
86 பேருக்கு ரத்த மாதிரி யாருக்கும் காய்ச்சல் இல்லை
ADDED : செப் 25, 2025 02:29 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்தவர் சக்திவேல், 40. கணினி இன்ஜினியரான இவர், தென் ஆப்பிரிக்காவுக்கு வேலைக்கு சென்று திரும்பிய நிலையில், மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி தலைமையில் சுகாதார குழுவினர், நேற்று முன்தினம் சக்திவேல் வீடு, தெருக்கள் மட்டுமின்றி, 50 மீ.,க்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு சுகாதார பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள, 86 பேருக்கு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அதில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு, யாருக்கும் இல்லை என, மருத்துவ அறிக்கை வந்ததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். சக்திவேலும் குணமடைந்து, நேற்று, வீடு திரும்பியதாக, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.