/உள்ளூர் செய்திகள்/சேலம்/300 புது வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., முகவருக்கு அறிவுறுத்தல்300 புது வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., முகவருக்கு அறிவுறுத்தல்
300 புது வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., முகவருக்கு அறிவுறுத்தல்
300 புது வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., முகவருக்கு அறிவுறுத்தல்
300 புது வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., முகவருக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 01:49 AM
தாரமங்கலம், சங்ககிரி தொகுதி, தாரமங்கலத்தில், நகர தி.மு.க., சார்பில் பாக முகவர், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர்
தங்கமுத்து தலைமை வகித்தார். தொகுதி தேர்தல் பார்வையாளர் செந்தில்குமார் பேசுகையில், ''முகவர்கள் புது வாக்காளர்களை சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது, 300 புது வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும்.
அதேபோல் உங்கள் பகுதி வீடுகளுக்கு சென்று மாணவ, மாணவியரிடம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தை பற்றி விளக்கி, வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும்,'' என்றார்.
நகர செயலர் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞரணி மணிகண்டன், தொழிலாளரணி கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.