ADDED : ஜூன் 22, 2025 01:30 AM
ஆத்துார், ஆத்துார், அம்பேத்கர் நகரில், பகுதியில் போலி பீடி கட்டுகள் தயார் செய்து விற்பனை செய்வதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி நேற்று,
ஆத்துார் டவுன் போலீசார், அம்பேத்கர் நகரில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது விஜயன், 33, என்பவர், அவரது வீட்டில், '501 மங்களூர் கணேஷ் பீடி' பெயரில் போலியாக அச்சிட்டு, பீடி கட்டுகள் தயாரித்து, சுற்றுவட்டார பகுதிகளில் விற்றுவந்தது தெரிந்தது. வீட்டில், 20 கட்டுகளில் இருந்த, 9,200 பீடிகள், அச்சிட வைத்திருந்த லேபிளை பறிமுதல் செய்த போலீசார், விஜயனை கைது செய்தனர்.


