/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பயிர் சாகுபடி வயலில் கழிவுநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை பயிர் சாகுபடி வயலில் கழிவுநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
பயிர் சாகுபடி வயலில் கழிவுநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
பயிர் சாகுபடி வயலில் கழிவுநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
பயிர் சாகுபடி வயலில் கழிவுநீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 02, 2025 01:58 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி யிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் வழியாக, 11வது வார்டு தாசிக்காட்டில் உள்ள குட்டைக்கு செல்கிறது.
சமீபத்தில் பெய்த மழையால், குட்டை நிரம்பி, ச.ஆ.,பெரமனுார் ஊராட்சி பகுதியில் விவசாய வயல்களில் புகுந்தது. பயிர் செய்யும் வயலில் சாக்கடை கழிவு நீர் தேங்கியதால், வரப்பை வெட்டி வெளியேற்றினர்.
கழிவு நீர் வடிந்த பின், உடைந்த கண்ணாடி, பயன்படுத்திய மருத்துவ ஊசி, பிளாஸ்டிக் கழிவு வயலில் தேங்கியது. இதனால், பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சாக்கடை கழிவு நீர், திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணற்றில் இறங்கியது. இதனால், குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வயலில் சாக்கடை கழிவு நீர் புகுந்து பயிர் சேதமடைவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என, ச.ஆ.,பெரமனுார் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


