/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
ADDED : ஜூன் 20, 2025 01:18 AM
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூர், ஏரிக்காட்டை சேர்ந்த, விவசாயி தங்கவேல், 75. இவரது தோட்டத்தில் குடிசை வீட்டில் வசித்தார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, 7:00 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதில் ஒரு பெட்டியில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து கருகின. தவிர விவசாய நில ஆவணங்கள், பாத்திரம், துணிகளும் நாசமாகின. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.