/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 தங்கம் மாநில போட்டிக்கு சிறுமி தேர்வு ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 தங்கம் மாநில போட்டிக்கு சிறுமி தேர்வு
ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 தங்கம் மாநில போட்டிக்கு சிறுமி தேர்வு
ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 தங்கம் மாநில போட்டிக்கு சிறுமி தேர்வு
ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 தங்கம் மாநில போட்டிக்கு சிறுமி தேர்வு
ADDED : செப் 24, 2025 01:31 AM
சேலம் :சேலம், கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லுாரி மைதானத்தில், கடந்த, 21ல், தமிழக ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவில் போட்டி நடந்தது. 4 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் என, 7 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், 8 - 10 வயது பிரிவில், சேலம், பட்டைக்கோவில் பகுதியை சேர்ந்த அருண், சரண்யா தம்பதியின், 10 வயது மகளான, 3ம் வகுப்பு மாணவி வேதிகா, 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை வென்றார்.
அதேபோல், 10 - 12 வயது பிரிவில் சிங்கமெத்தையை சேர்ந்த ராஜ்குமார் - பூர்ணிமா தம்பதியின், 11 வயது மகனான, 4ம் வகுப்பு மாணவர் வித்யுத், ஒரு தங்கம், இரு வெண்கல பதக்கங்களை வென்றார். இதன்மூலம், வேதிகா, வித்யுத் ஆகியோர், அக்., 25ல், சென்னையில் நடக்க உள்ள மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.