/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை மறியலுக்கு முயன்றதால் அரசு ஊழியர் சங்கத்தினர் கைது சாலை மறியலுக்கு முயன்றதால் அரசு ஊழியர் சங்கத்தினர் கைது
சாலை மறியலுக்கு முயன்றதால் அரசு ஊழியர் சங்கத்தினர் கைது
சாலை மறியலுக்கு முயன்றதால் அரசு ஊழியர் சங்கத்தினர் கைது
சாலை மறியலுக்கு முயன்றதால் அரசு ஊழியர் சங்கத்தினர் கைது
ADDED : ஜூன் 20, 2025 01:18 AM
சேலம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமாயி தலைமை வகித்தார். அதில், தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பல்வேறு துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட செயலர் செல்வம் பேசுகையில், ''வருவாய்த்துறையில் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்குவதாக, 2021ல் தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும் காலம் தாழ்த்தி வருகிறது,'' என்றார். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், 26 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.