/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கொலை, திருட்டு வழக்குகள் 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' கொலை, திருட்டு வழக்குகள் 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கொலை, திருட்டு வழக்குகள் 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கொலை, திருட்டு வழக்குகள் 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கொலை, திருட்டு வழக்குகள் 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : டிச 03, 2025 07:54 AM
சேலம் அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுார் பெருமாள் கோவில் மேல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 23. இவர் கடந்த நவ., 12ல், மேட்டுப்பட்டி தாதனுாரில் உள்ள செயலக அலுவலக பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, 61,996 ரூபாய், ஊராட்சி செயலரின் 1 பவுன் நகையை திருடிச்சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது, 2022, 2024ம் ஆண்டுகளில் திருட்டு, அடிதடி வழக்கில் கைதானதும் தெரிந்தது.
அதேபோல் பொன்னம்மாபேட்டை, வடக்கு ரயில்வே லைனை சேர்ந்த சந்தோஷ், 45, என்பவர், கடந்த நவ., 7ல், சகோதரர் தியாகராஜனை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்தார். அம்மாபேட்டை போலீசார், அவரை கைது செய்தனர். சுரேஷ், சந்தோஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.


