/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 1,330 குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு அழைப்பு 1,330 குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு அழைப்பு
1,330 குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு அழைப்பு
1,330 குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு அழைப்பு
1,330 குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு அழைப்பு
ADDED : அக் 01, 2025 01:43 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: தமிழக அரசின், திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டத்தில், 1,330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தலா, 15,000 ரூபாய் பரிசு, தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் உள்ளிட்டவற்றை தெரிவித்தால் அதற்கான குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில், 1,330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர், இப்போட்டியில் பங்கேற்கலாம். அதற்கு தமிழ் வளர்ச்சித் துறையின், https://tamilvalarchithurai.org/tkm என்ற இணையத்தில் விண்ணப்பித்து, அதன் நகலை, வரும், 30க்குள் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். விபரம் பெற, 0427 - 2417741 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


