ADDED : பிப் 12, 2024 10:22 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில், 1950 பிப்., 11ல் கைதிகளாக இருந்த, கம்யூ., கட்சியை சேர்ந்த, 22 பேரை, சிறை நிர்வாகம் சுட்டுக்கொன்றது. இதனால் சிறை தியாகிகள் நினைவு தினம், மா.கம்யூ., கட்சியினரால் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
அதில் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை முன் கொடி ஏற்றி, தியாகிகள் நினைவு சுடர் ஏந்தி ஊர்வலம் நடந்தது. ராமகிருஷ்ணா சிக்னல் வழியே, அக்கட்சி மாவட்ட குழு அலுவலகம் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலர் மேவை சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி உள்பட பலர் பங்கேற்றனர்.