மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : அக் 01, 2025 01:44 AM
சேலம், சேலம், சூரமங்கலம், அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் பிரித்வி
ராஜ், 29. தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பிரிவு மேலாளராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன், கடந்த செப்., 26ல், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ கதவும் உடைக்கப்பட்டு, அரை பவுன் தோடு, வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. பிரித்விராஜ் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


