/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலீசாருக்கு மிரட்டல் கூலித்தொழிலாளி கைதுபோலீசாருக்கு மிரட்டல் கூலித்தொழிலாளி கைது
போலீசாருக்கு மிரட்டல் கூலித்தொழிலாளி கைது
போலீசாருக்கு மிரட்டல் கூலித்தொழிலாளி கைது
போலீசாருக்கு மிரட்டல் கூலித்தொழிலாளி கைது
ADDED : பிப் 25, 2024 03:34 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன், 28. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா, 25. இவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, தம்மம்பட்டி போலீசில் கணவர் மீது மனைவி புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து இருவரையும் நேற்று ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது எஸ்.ஐ., கோபால் உள்ளிட்ட போலீசாரை, கோவிந்தன் மிரட்டல் விடுத்து, ரகளை செய்தார். இதனால் போலீசார், அரசு பணியை தடுத்தல், மிரட்டல் உள்பட, 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.
மான் வேட்டையாடிய 3 பேர்ரூ.2.50 லட்சம் அபராதம்
சேலம்: சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரகம் பன்னிக்கரடு வடக்கு பீட் பகுதியில் மானை வேட்டையாடி கறி சமைப்பதாக, வனச்சரக அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் குழுவினர் அங்கு சென்று, மான் வேட்டையாடிய, 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஏற்காடு அருகே சொனப்பாடியை சேர்ந்த து.ராமர், 33, க.ராமர், 20, மாதையன், 35 என தெரிந்தது. அவர்களிடம் மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கட்டட தொழிலாளி மர்மச்சாவுகெங்கவல்லி-
கெங்கவல்லியை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ், 35. இவர் நேற்று முன்தினம், வேலைக்கு சென்றார். ஆனால் இரவு, 11:00 மணிக்கு வலசக்கல்பட்டி ஏரிக்கரையில், ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கெங்கவல்லி போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அதிகளவில் போதையில் இருந்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் தீமர்ம நபர் மீது வழக்கு
ஆத்துார்: ஆத்துார் அடுத்த உலிபுரத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. அப்போது, காளைகளை அவிழ்த்து விடுவதில், அதன் உரிமையாளர்கள் இடையே பிரச்னை எழுந்தது. அப்போது ஜல்லிக்கட்டு மைதானத்தில் போடப்பட்டிருந்த தேங்காய் நார்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீயணைப்பு துறை வீரர்கள், போலீசார், விழாக்குழுவினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து உலிபுரம் வி.ஏ.ஓ., துரை, நேற்று தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனால் மர்ம நபர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கிணற்றில் சடலமாக மீட்பு
சேலம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மலையம்பாளையத்தை சேர்ந்தவர்
சித்தையன், 50. அரசு போக்குவரத்து
கழகத்தில் பஸ்சை சுத்தம் செய்யும் பணியாளராக வேலை பார்த்தார்.
இரு நாட்களுக்கு முன, சேலம், ஜாகீர் சின்னம்மாபாளைத்தில் உள்ள தாய்மாமன் சாமுவேல் வீட்டுக்கு வந்தார். ஆனால் நேற்று காலை, 9:00 மணிக்கு அங்குள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், அவர் சடலமாக மிதந்தார். தீயணைப்பு துறையினர், அவரது உடலை மீட்டனர். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.