Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மகாகவி பாரதியார் பாடலை கேட்டால் கிழவனுக்கும் சுதந்திர வேட்கை ஏற்படும்'

மகாகவி பாரதியார் பாடலை கேட்டால் கிழவனுக்கும் சுதந்திர வேட்கை ஏற்படும்'

மகாகவி பாரதியார் பாடலை கேட்டால் கிழவனுக்கும் சுதந்திர வேட்கை ஏற்படும்'

மகாகவி பாரதியார் பாடலை கேட்டால் கிழவனுக்கும் சுதந்திர வேட்கை ஏற்படும்'

ADDED : ஜூன் 21, 2025 12:46 AM


Google News
சேலம், தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஜாகீர் அம்மாபாளையம் சுப்ரமணிய நகர் கிளை சார்பில், 3 நாட்கள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, சேலம், வி.எம்.கே., - வி.எம்.ஜி., மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கிளை தலைவர் வெங்கட்ராமன் வரவேற்றார்.

அதில், 'வில்லிபாரதம்' தலைப்பில், நாகை முகுந்தன் பேசியதாவது:

பித்தளை, செம்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனில், அதை பளபளப்பாக்க அதிக முயற்சி தேவைப்படும். அதேநேரம் தங்க பாத்திரத்தை பளபளபாக்க, பட்டு துணியில் துடைத்தால் போதும். ராமாயண, மகா பாரத கதை சொல்லி முடிக்க, 3 மாதங்கள் தேவைப்படும். ஆனால், 3 நாட்களில் சொன்னாலும் போதும். தங்க பாத்திரம் போல் எளிதாக கிரகித்துக்கொள்ள முடியும்.

மின்சாரம் கண்ணுக்கு தெரியாது. இருக்கிறது என்பதை உணர முடியும். இறைசக்தியை ஊனக்கண்களால் பார்க்க முடியாது. ஆனால் உணர முடியும். நல்ல காரியம் நடக்கும்போது புண்ய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். நமக்காக, புண்ய நதிகளை கடலில் கலக்கி, மேகமாக்கி, மழையாக நமக்கு வழங்கி, இறை நமக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பாரதியார், தேச பக்தியை பாடியவர் என்பது பெரும்பாலோருக்கு தெரியும். அவர் தேச பக்தியோடு, தெய்வ பக்தியையும் பாடியவர். அவரது பாடலை கேட்டால், 'குடுகுடு' கிழவனுக்கு கூட, சுதந்திர வேட்கை, ஆவேசம் ஏற்படும். காக்கையின் கறுமையிலும் கண்ணனை கண்டவர் பாரதியார். அந்த காலத்தில் புலவர்கள் வறுமையில் இருந்தனர், ஆனால், தமிழ் செழுமையாக இருந்தது. இந்த காலத்தில் புலவர்கள் செழுமையாக உள்ளனர். தமிழ் வறுமையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us