மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்
ADDED : செப் 25, 2025 02:27 AM
பெத்தநாயக்கன்பாளையம் :பெத்தநாயக்கன்பாளையம், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன், 55. இவரது மகன் அஜித்குமார், 29. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், 'காருண்யா' இல்ல கிளையான, ஓமலுார், நரிப்பள்ளியில் உள்ள இல்லத்தில் உள்ளார்.
அவரை நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு ராஜேந்திரன் அழைத்து வந்தார். மாலை, 5:30 மணிக்கு அவர் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், ராஜேந்திரன் நேற்று அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் தேடுகின்றனர்.