/உள்ளூர் செய்திகள்/சேலம்/'ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...' சுற்றுலா பயணியர் ஆச்சரியம்'ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...' சுற்றுலா பயணியர் ஆச்சரியம்
'ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...' சுற்றுலா பயணியர் ஆச்சரியம்
'ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...' சுற்றுலா பயணியர் ஆச்சரியம்
'ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...' சுற்றுலா பயணியர் ஆச்சரியம்
ADDED : ஜூன் 20, 2025 01:51 AM
ஏற்காடு, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரு வாரங்களாக, மாலை, இரவில் மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த இரு நாட்களாக ஏற்காடு முழுதும் ஏராளமான வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்து சென்றபடி உள்ளன. குறிப்பாக தோட்டங்கள், வனப்பகுதிகளில் உலா வந்தன. இப்படி கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளை, பூங்காக்கள், படகு இல்லம், ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்தபடி சுற்றுலா பயணியர் பார்த்து, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். உள்ளூர் மக்களும் ஆச்சரியமாக பார்த்தனர்.
இதுகுறித்து, தமிழக வேளாண் பல்கலை சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் சாரா பர்வீன் கூறுகையில், ''வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில், ஏற்காடு மலைகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வது வழக்கம். ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளை, நான் காண்பது இதுவே முதல் முறை,'' என்றார்.