/உள்ளூர் செய்திகள்/சேலம்/கரியகோவில் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்புகரியகோவில் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
கரியகோவில் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
கரியகோவில் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
கரியகோவில் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
ADDED : பிப் 25, 2024 03:58 AM
பெ.நா.பாளையம்,: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை, பாப்பநாயக்கன்பட்டியில், 3,600 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்படி, 350 ஏக்கரில் கரியகோவில் அணை, 52.49 அடி உயரத்தில் உள்ளது. தற்போது, 34.09 அடியாக நீர்மட்டம் இருந்தது.
இதில் பழைய பாசன பகுதிகளுக்கு அணையின் தலைமை மதகு வழியே நேற்று, 40 கன அடி(வினாடிக்கு) நீரை, நீர்வளத்துறை அலுவலர்கள் திறந்துவிட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்படி, 11 நாட்களுக்கு, 37.95 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அதேபோல் புது பாசன பகுதிகளுக்கு மார்ச், 6ல் வலது, இடது புற கால்வாய் வழியே தினமும் தலா, 15 கன அடி வீதம், 30 கன அடி நீர் என, 10 நாட்களுக்கு, 25.90 மில்லியன் கன அடி நீர் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.