/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அடிப்படை வசதி இல்லாததால் அரசுப்பள்ளிக்கு பெற்றோர் பூட்டு அடிப்படை வசதி இல்லாததால் அரசுப்பள்ளிக்கு பெற்றோர் பூட்டு
அடிப்படை வசதி இல்லாததால் அரசுப்பள்ளிக்கு பெற்றோர் பூட்டு
அடிப்படை வசதி இல்லாததால் அரசுப்பள்ளிக்கு பெற்றோர் பூட்டு
அடிப்படை வசதி இல்லாததால் அரசுப்பள்ளிக்கு பெற்றோர் பூட்டு
ADDED : அக் 24, 2025 01:30 AM
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால், அரசுப்பள்ளிக்கு பூட்டு போட்டு, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே இந்திரா நகரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டது. பள்ளியை சுற்றி புதர்மண்டியுள்ளது. மேலும் பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி போதுமானதாக இல்லை.
இதுகுறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தொடர் மழையால் தற்போது பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று காலை பள்ளிக்கு மாணவர்களை விட வந்த பெற்றோர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர். இதையடுத்து மதியம், 12:00 மணிக்கு மேல், மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.


