/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காத்திருப்போர் பகுதியில் வாகன நிறுத்தம் நோயாளிகள், கர்ப்பிணியருக்கு இடையூறு காத்திருப்போர் பகுதியில் வாகன நிறுத்தம் நோயாளிகள், கர்ப்பிணியருக்கு இடையூறு
காத்திருப்போர் பகுதியில் வாகன நிறுத்தம் நோயாளிகள், கர்ப்பிணியருக்கு இடையூறு
காத்திருப்போர் பகுதியில் வாகன நிறுத்தம் நோயாளிகள், கர்ப்பிணியருக்கு இடையூறு
காத்திருப்போர் பகுதியில் வாகன நிறுத்தம் நோயாளிகள், கர்ப்பிணியருக்கு இடையூறு
ADDED : ஜூன் 18, 2025 01:51 AM
ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வெளியே காத்திருப்போர் பகுதி உள்ளது. செவ்வாய்தோறும் கர்ப்பிணியர், பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர்.
அதன்படி நேற்று, 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் மட்டுமின்றி, நோயாளிகளும் வந்தனர். சிலர் மருத்துவமனை உள்ளே அமர்ந்திருந்தனர். சில கர்ப்பிணியர், மரத்தடியில் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர், குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தரையில் அமைந்திருந்தனர்.
காத்திருப்போர் பகுதியில் அமரும்படி, 'சிலாப்'புகள் உள்ள நிலையில், அங்கு பைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனையில் பணிபுரிவோரின் இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால், கர்ப்பிணியர் அமரமுடியாத நிலை ஏற்பட்டு, ஆங்காங்கே தரையில் அமர்ந்து சிரமப்பட்டனர். முதியோரும், காத்திருப்போர் பகுதியை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். அதனால் அந்த இடத்தில், நோயாளிகள், கர்ப்பிணியர், அவர்களுடன் வருவோர் எளிதாக அமரும்படி, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.