/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : அக் 03, 2025 02:02 AM
சேலம், மகாத்மா காந்தி, பிறந்தநாளை ஒட்டி, சேலத்தில், பா.ஜ.,வின், மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் அக்கட்சியினர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பார்வையாளர் முருகேசன், மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்., சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்தனர். மாநகர துணை தலைவர் கோபி குமரன், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது, ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், காந்தி படத்துக்கு, மேயர் ராமச்சந்திரன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். கமிஷனர் இளங்கோவன், மண்டல குழு தலைவர் அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஓமலுாரில் உள்ள காந்தி சிலைக்கு, த.மா.க., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், மத நல்லிணக்கம், தீவிரவாத ஒழிப்பு உறுதிமாழி எடுத்துக்கொண்டனர்.
மல்லுார் அகரம் வெள்ளாஞ்செட்டியார் நலச்சங்கம் சார்பில், தலைவர் சுகுமார் தலைமையில், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். செயலர் விஜயகுமார், துணை செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாரமங்கலம் நகர காங்., சார்பில், நகர தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆத்துார் பாரதியார் மகாத்மா பண்பாட்டு பேரவை மற்றும் சேவை சங்கம் சார்பில் நேற்று, காந்தியின் பிறந்த நாளையொட்டி, அமைதி ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம், கடைவீதியில் துவங்கிய ஊர்வலம், நான்கு ரோடு, உடையார்பாளையம் வழியாகச் சென்று, காந்தி சிலை சென்றடைந்தனர். அங்கு, காந்தியின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், சேவை சங்கம், தன்னார்வ அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.


