/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் வழங்காததால் மக்கள் சாலை மறியல் குடிநீர் வழங்காததால் மக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததால் மக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததால் மக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததால் மக்கள் சாலை மறியல்
ADDED : செப் 20, 2025 01:26 AM
ஆத்துார், ஆத்துார் நகராட்சி, 31வது வார்டு, அம்பேத்கர் நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 20 நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை.
இதனால் நேற்று மாலை, 4:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, கவுன்சிலர் சங்கர் தலைமையில் மக்கள், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிரைன் பஜார் பஸ் ஸ்டாப்பில், மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது சங்கர், '31வது வார்டில், 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. இங்குள்ள பணி களையும் நகராட்சி நிர்வாகம் சரிவர மேற்கொள்வதில்லை. என் வார்டை புறக்கணிப்பதால், மக்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலை உள்ளது. கமிஷனர் வந்தால் தான் எழுந்து செல்வோம்' என்றார்.
ஆனால் போலீசார், 'குடிநீருக்கு நகராட்சியிடம் சென்று முறையிட வேண்டும். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தனர். பின் மாலை, 4:50 மணிக்கு, கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால்,
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.