/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம் தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 19, 2025 01:37 AM
சேலம், சேலம், கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கோவிந்தன் பேசுகையில், ''இடங்கணசாலையை சேர்ந்த தறி தொழிலாளி மணி, ராசிபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினார். வட்டி செலுத்த ஒரு மாதம் தாமதமாக, நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் மணி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காரணமான ஊழியர்களை கைது செய்ய வேண்டும். மணியின் மகள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சுமை துாக்கும் சங்க மாநில தலைவர் வெங்கடாபதி, சி.ஐ.டி.யு., உதவி தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.