Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/குட்டையான ஏரிகள்: விவசாயிகள் ஏமாற்றம்

குட்டையான ஏரிகள்: விவசாயிகள் ஏமாற்றம்

குட்டையான ஏரிகள்: விவசாயிகள் ஏமாற்றம்

குட்டையான ஏரிகள்: விவசாயிகள் ஏமாற்றம்

ADDED : ஜன 28, 2024 11:08 AM


Google News
கொளத்துார்: சேலம் மாவட்டம் கொளத்துார் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 3 ஏரிகள் உள்ளன. அதில் லக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள கொத்தனேரி, 20 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 437 ஏக்கர் பாசன வசதி; ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தும்பல் காட்டு பள்ளம் ஏரி, 42 மில்லியன் கன அடி, 640 ஏக்கர் பாசன வசதி; கருங்கல்லுார் ஊராட்சி, செம்மலை சிவிலிக்கரடு ஏரி, 21 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 323 ஏக்கர் பாசன வசதி கொண்டது.

இந்த ஏரிகள், வடகிழக்கு பருவமழை சீசனில் கிடைக்கும் நீரால் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு சென்றடையும். நடப்பாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதனால் கடந்த ஆண்டு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்ட, 3 ஏரிகளிலும் சிறு பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. இதனால் அதை நம்பி சாகுபடி செய்த, 1,398 ஏக்கர் பரப்பளவு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதில் கிணற்று பாசனம் உள்ள விவசாயிகள் மட்டும் வேர் கடலை, எள், சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us