/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நோட்டர் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவ மன்ற தலைவர்கள் பதவியேற்பு நோட்டர் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவ மன்ற தலைவர்கள் பதவியேற்பு
நோட்டர் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவ மன்ற தலைவர்கள் பதவியேற்பு
நோட்டர் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவ மன்ற தலைவர்கள் பதவியேற்பு
நோட்டர் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவ மன்ற தலைவர்கள் பதவியேற்பு
ADDED : ஜூன் 20, 2025 01:20 AM
சேலம், சேலம், உடையாப்பட்டி, குண்டுக்கல்லுார் நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில், 2025- - 26ம் கல்வி ஆண்டு மாணவர் மன்ற தலைவர் பதவியேற்பு விழா, பள்ளி கலையரங்கில் நடந்தது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவி அனன்யா, துணைத்தலைவி யாமினி, விளையாட்டு பிரிவு செயலர் ஜாகிர், துணை செயலர் அகிலேஷ், கலைப்பிரிவு செயலர் சூர்யபிரகாஷ், துணை செயலர் ஹர்ஷிதா, கல்வி சார் இணை பாடத்திட்ட செயல்பாடு பிரிவு செயலர் கார்த்திகேஷ்வர், துணை செயலர் கிருஷ்ணிகாவினோத் மற்றும் மோரோ, துஜாரே, ஆன்ரே, நோட்ரி டேம் ஆகிய, 4 அணி தலைவர்கள், தமிழ், ஆங்கில மன்றங்கள் உள்பட, 19 மன்ற தலைவர்களுக்கு, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட செயல்பாட்டு மேலாளர் ஆனந்த் ராகவ், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அவர்கள் பதவியேற்றனர். பின் நடன நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, பள்ளி தாளா ளர் மரியசுரேஷ், நிர்வாகி குழந்தைசாமி, ஆலோசகர் கில்பர்ட், ஆசிரியர் கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.