/உள்ளூர் செய்திகள்/சேலம்/குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்
குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்
குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்
குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்
ADDED : ஜன 28, 2024 03:37 PM
கொளத்துார் :குடியரசு தினத்தில் ஏற்றிய தேசிய கொடியை இறக்காததால், விடிய விடிய பறந்து கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் கொளத்துார், மூலக்காடு ஊராட்சி அலுவலகம் முன், நேற்று முன்தினம் காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அந்த கொடியை, இருள் சூழ்வதற்கு முன் இறக்கி விட வேண்டும். ஆனால் கொடி இறக்கப்படாமல் விடிய விடிய நேற்று காலை வரை பறந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் பரவியதால், நேற்று காலை அவசர, அவசரமாக கொடி இறக்கப்பட்டது.இதுகுறித்து ஊராட்சி செயலர் பிரபாகரன் கூறுகையில், ''தேசிய கொடியை மாலையில் இறக்கி விடுங்கள் என ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டரிடம் கூறி சென்றேன். எனக்கும், தாய்க்கும் உடல்நிலை சரியில்லாததால், இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டேன். பம்ப் ஆப்பரேட்டர், கொடியை இறக்க மறந்து விட்டார். தகவல் கிடைத்ததும் கொடியை இறக்கி விட்டோம்,'' என்றார்.