Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரங்கள், பசுமைவெளிகள் 6 மாநகரங்களில் கணக்கெடுப்பு

மரங்கள், பசுமைவெளிகள் 6 மாநகரங்களில் கணக்கெடுப்பு

மரங்கள், பசுமைவெளிகள் 6 மாநகரங்களில் கணக்கெடுப்பு

மரங்கள், பசுமைவெளிகள் 6 மாநகரங்களில் கணக்கெடுப்பு

ADDED : டிச 03, 2025 07:35 AM


Google News
சேலம், தமிழகத்தில் பசுமைப்பரப்பை அதிகரிக்க, நகர்புறங்களில் மரங்களின் எண்ணிக்கை, பசுமைவெளி காலி இடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, முதல்கட்டமாக சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதன் மூலம் நிலத்தின் பசுமை அளவை தெரிந்து, அதற்கேற்ப மரங்கள் எண்ணிக்கையை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நட்டு

சமநிலைப்படுத்த முடியும்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மரங்கள் எண்ணிக்கை, பசுமைவெளி பகுதிகள், மரங்கள் நட ஏற்ற காலி இடங்கள் குறித்து செயற்கைக்கோள் படங்கள், மேம்பட்ட புவியியல் ஆய்வு மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு மரத்தையும் அடையாளம் கண்டு அதன் தன்மை, பயன், பருவம், நீள, அகல உயர விபரங்கள் குறிக்கப்பட்டு, துல்லிய கணக்கெடுப்பாக

நடத்தப்படும்.

வெற்றிடங்களை கண்டறிந்து அங்கு மரங்களை நடுவதன் மூலம், காற்று மாசுபாடு குறைந்து புவி வெப்பம் அடைவது தடுக்கப்படும். கணக்கெடுப்பு விபரங்கள், கணினி வலைதளங்களில் பராமரிக்கப்படும். இதற்கு தமிழக அரசு, முதல்கட்டமாக, 2.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் கணக்கெடுப்பு பணி தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us