/உள்ளூர் செய்திகள்/சேலம்/தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி நீக்கம்தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி நீக்கம்
தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி நீக்கம்
தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி நீக்கம்
தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி நீக்கம்
ADDED : பிப் 25, 2024 03:36 AM
ஆத்துார்: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியை சேர்ந்தவர் பிரியா, 30. அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க., ஆட்சிக்கு பின், அமைச்சர் நேரு முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவர் விஜேந்திரன் தலைமையில், 5 பேர், அ.தி.மு.க., கவுன்சிலர், 4 பேர், அரசு திட்டப்பணிகளில் பிரியா பல்வேறு முறைகேடு செய்வதாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்படி, அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில், 9 கவுன்சிலர்கள், பிரியாவுக்கு எதிராக ஓட்டு போட்டனர். ஆனால், தி.மு.க., கவுன்சிலர் கலைச்செல்வி பங்கேற்கவில்லை.
இந்த தீர்மான விபரங்களை, ஆர்.டி.ஓ., ரமேஷ், தமிழக அரசுக்கு அனுப்பினார். இதையடுத்து, கவர்னர் ரவி, பிரியாவை, ஒன்றிய குழு தலைவி பதவியில் இருந்து நீக்கினார். இந்த உத்தரவு, நேற்று முன்தினம், அமலுக்கு வந்ததாக, தமிழக அரசின் முதன்மை செயலர் செந்தில்குமார், அரசிதழ் உத்தரவை அனுப்பி வைத்தார். இதையடுத்து கெங்கவல்லி பி.டி.ஓ., சந்திரசேகர், தலைவர் பொறுப்பு பதவி தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் பிருந்தாதேவிக்கு தபால் அனுப்பியுள்ளார்.