/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஒத்தையடி பாதை, ஓடையை கடந்து உடலை எடுத்துச்சென்ற கிராம மக்கள் ஒத்தையடி பாதை, ஓடையை கடந்து உடலை எடுத்துச்சென்ற கிராம மக்கள்
ஒத்தையடி பாதை, ஓடையை கடந்து உடலை எடுத்துச்சென்ற கிராம மக்கள்
ஒத்தையடி பாதை, ஓடையை கடந்து உடலை எடுத்துச்சென்ற கிராம மக்கள்
ஒத்தையடி பாதை, ஓடையை கடந்து உடலை எடுத்துச்சென்ற கிராம மக்கள்
ADDED : ஜூன் 18, 2025 01:48 AM
ஏற்காடு, ஏற்காட்டில் இருந்து, 15 கி.மீ.,ல், செம்மநத்தம், சோலுார் கிராமம் உள்ளது. அங்கு, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்தால், சுடுகாட்டில் உடலை அடக்கம்
செய்வதற்கு, ஒத்தை அடி பாதை, நீரோடையில் நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. நேற்று, அந்த கிராமத்தை சேர்ந்த வெள்ளையாகவுண்டர் மனைவி நாச்சியம்மன், 70,
என்பவர் இறந்தார். அவரது உடலை, ஓடையை ஒட்டிய ஒத்தை அடி பாதை மற்றும் ஓடையை கடந்து, கிராம மக்கள் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'உடலை எடுத்துச்செல்லும்போது, ஓடையில் விழுவது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் இறந்தவர்களின் உடலே விழுந்து மறுபடியும் எடுத்துச்செல்லும் அவல நிலை நேரிடுகிறது.
இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள், கிராம சபை கூட்டங்களில் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. எங்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல, சரியான பாதை வசதி ஏற்படுத்தித்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.