இளையான்குடிக்கு 15 பேட்டரி வாகனம்
இளையான்குடிக்கு 15 பேட்டரி வாகனம்
இளையான்குடிக்கு 15 பேட்டரி வாகனம்
ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மக்கும், மக்கா குப்பை சேகரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படுகிறது.துப்புரவு பணியாளர்கள் சுலபமாக கையாளும் வகையில் 15 பேட்டரி வாகனம் வாங்கப்பட்டுள்ளன.
இதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார்.எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன்,பேரூராட்சி துணை தலைவர் இப்ராகிம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.