/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்
பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்
பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்
பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்
ADDED : ஜூன் 01, 2024 04:46 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி மேட்டுமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேட்டுமடை சமயணசுவாமி கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன. 250க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர்.
வாடி வாசலிலிருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்காமல் இருந்தனர். பின்னர் அவிழ்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர்.இதில் ஏராளமான மாடுகள் வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடின.
காயமடைந்தவர்களுக்கு கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும், ஊழியர்களும் சிகிச்சை அளித்தனர். மாடு பிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.