ADDED : ஜூன் 02, 2024 03:46 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் 2023ம் ஆண்டு ஜூன் 1ல் நடந்தது. ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று வருடாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.