/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் படையெடுக்கும் பாம்புகள்: கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம் சிவகங்கையில் படையெடுக்கும் பாம்புகள்: கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம்
சிவகங்கையில் படையெடுக்கும் பாம்புகள்: கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம்
சிவகங்கையில் படையெடுக்கும் பாம்புகள்: கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம்
சிவகங்கையில் படையெடுக்கும் பாம்புகள்: கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம்
UPDATED : ஜூன் 01, 2024 06:32 AM
ADDED : ஜூன் 01, 2024 04:43 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் படையெடுக்கும் பாம்புகளால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக தரை தளத்தில் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அலுவலகங்கள் செயல்படுகிறது. மேலும் இந்த வளாகத்திலேயே இ- சேவை மையம், ஆதார் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை எடுக்க மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் அலுவலக ஜன்னல் வழியே அடிக்கடி பாம்பு அலுவலகத்திற்குள் வருவதால், அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்துடனே பணிபுரிகின்றனர். அங்குள்ள செயல்படாத 'ஏசி'க்குள் அடிக்கடி பாம்பு புகுந்து விடுவதால், அவற்றை வெளியேற்ற தீயணைப்பு துறை வீரர்களின் உதவியை அடிக்கடி நாடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அலுவலக குப்பை கூடையின் மேல் சிறிய பாம்பு நிற்பதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
பல முறை 10க்கும் மேற்பட்ட பாம்புகளை அடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கதர் கிராம தொழில் உதவி இயக்குனர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அலுவலக வளாகங்களில் பாம்பு தொடர்ந்து படையெடுத்து வருவதால், ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
அலுவலகத்திற்குள் தேவையற்ற ஆவணங்களை மூடை மூடையாக குவித்து வைத்திருப்பதால், அவற்றிற்குள் பாம்பு தஞ்சம் அடைய வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று கூட உதவி இயக்குனர் டேபிளுக்கு மேலே இருந்து பாம்பு ஒன்று கீழே விழுந்தது. பாம்புகள் நடமாட்டத்தை தடுத்து ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை மாவட்ட நிர்வாகம் போக்க வேண்டும்.