/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அகற்றப்படாத குப்பை தவிப்பில் ஊழியர்கள் அகற்றப்படாத குப்பை தவிப்பில் ஊழியர்கள்
அகற்றப்படாத குப்பை தவிப்பில் ஊழியர்கள்
அகற்றப்படாத குப்பை தவிப்பில் ஊழியர்கள்
அகற்றப்படாத குப்பை தவிப்பில் ஊழியர்கள்
ADDED : ஜூலை 10, 2024 04:32 AM

தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள வீதியில் வர்த்தத நிறுவனங்கள், பாங்க் கிளை, மருத்துவமனை, மீன் மார்க்கெட், 150 வீடுகள் உள்ளன. இந்த வீதியை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பாங்க் ஏடிஎம் வாசல் அருகிலேயே குப்பை கொட்டி குவித்து வைக்கப்படுகிறது. இந்த குப்பை மையத்தின் வங்கி, மற்றொரு பகுதியில் மருத்துவமனை உள்ளன.
வங்கிக்கு வருவோர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவோர் மூக்கைபிடித்துக் கொண்டு சிரமப்படுகின்றனர்.
அப்பகுதி வீடுகளில் இருப்போரோ 24 மணி நேரமும் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.
நகராட்சி அதிகாரிகளோ இதை பற்றி கவலைப்படாததால் மக்கள் அவதி தொடர்கிறது.