ADDED : ஜூலை 28, 2024 11:51 PM
இளையான்குடி : உலகமனியேந்தல் கிராமத்தில் தென்மண்டல மதுரை மீனாட்சி அம்மன் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தனிக்கொடி தலைமையில் நடந்தது. பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 50 வயதை கடந்த உறுப்பினர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்,தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் ராஜபதி, ராமமூர்த்தி, முருகேசன், பாண்டியம்மாள் கலந்து கொண்டனர்.