ADDED : ஜூலை 29, 2024 10:48 PM

சிவகங்கை : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் இந்திய கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் வழக்கறிஞர் மருது தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்கை சேகரன், சந்திரன், ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, மாதவன், நகர துணை செயலாளர் சகாயம் கலந்துகொண்டனர்.
* காரைக்குடி கழனிவாசலில், மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்தும், மின்சார சட்டத்தை மத்திய அரசு வாபஸ் வாங்க வலியுறுத்தியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூ., கட்சி சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு நகரச்செயலாளர் சிவாஜி காந்தி தலைமையேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் கோபால் பேசினார்.கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எல். ராமச்சந்திரன், ஜி. ராஜா, மஞ்சுளா, ரிச்சர்ட் தேவி, பழனியம்மாள், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.