ADDED : ஜூன் 02, 2024 03:47 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன்.
இப்பள்ளி மாணவர்கள்என்.எம்.எஸ்.எஸ். தேர்வில் 79 மாணவர்கள், ட்ரஸ்ட் தேர்வில்150 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். திறனாய்வு தேர்வில் மாணவர்கள் பெற்ற உதவிதொகை மட்டுமே ரூ 44 லட்சம். தற்போது 800க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
தற்போது ஓய்வுபெறும் தலைமையாசிரியர் மதிவாணனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
சி.இ.ஓ., பாலுமுத்து தலைமை வகித்தார். டி.இ.ஓ., உதயக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராமையா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, மாவட்ட விளையாட்டு மேம்பாடு குழு தலைவர் நாராயணன், டி.இ.ஒ., (தனியார் பள்ளி) விஜயசரவணக்குமார், டி.இ.ஓ.,க்கள் (துவக்கப்பள்ளி) செந்தில்குமரன், மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் குமார், பேரூராட்சி கவுன்சிலர் நேரு வாழ்த்தினர். தலைமையாசிரியர் மதிவாணன் ஏற்புரையாற்றினார்.
ஏற்பாட்டினை ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர், கிராமத்தினர்,மாணவ, மாணவியர் செய்தனர்.