/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம் மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்
மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்
மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்
மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்
ADDED : ஜூலை 17, 2024 12:05 AM
பழையனுார் : பழையனுார் அருகே முதுவன்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த பாரம்பரியம் மிக்க மொகரம் திருவிழா அன்று இந்துக்கள் நடத்தும் தீ மிதி திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதுவன்திடலில் முளைப்பாரி திண்ணைக்கு எதிராக பாத்திமா பள்ளிவாசல் உள்ளது. முதுவன்திடலில் வசித்து வந்த இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகை உள்ளிட்டவை நடத்துவது வழக்கம், காலப்போக்கில் இஸ்லாமியர்கள் திருப்புவனம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டனர்.
ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் ஒரு வாரம் காப்பு கட்டி விரதமிருந்து அதிகாலை மூன்று மணியளவில் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம், முதுவன்திடலில் உள்ளாட்சி தேர்தலில் இருந்து கிராமமக்கள் இருதரப்பாக செயல்படுவதுடன் மோதலும் ஏற்பட்டு வருகிறது.
கடந்தாண்டு திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு முடிவு எட்டப்படாததால் ரத்து செய்யப்பட்டது.
இந்தாண்டும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித முடிவும் எட்டப்படாததால், இரண்டாவது ஆண்டாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.