ADDED : ஜூலை 29, 2024 10:48 PM
காரைக்குடி : சாக்கோட்டை அருகே உள்ள செங்காத்தன்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் 39. கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் சென்றார். ஆலமங்கலம் அருகே சென்றபோது டூரிஸ்ட் வேன் ஒன்று மோதியதில் முருகேசன் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் எழுப்பினர். நேற்று சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனை செங்காத்தன்குடி கிராம மக்கள்மற்றும் முருகேசனின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டி.எஸ்.பி., பிரகாஷ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.