Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

ADDED : ஜூலை 16, 2024 05:04 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 24 ஆண்டிற்கு பின் ஆக.,22ல் நடைபெற உள்ளது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்மன் நின்ற கோலத்தில் 4 திருக்கரங்களுடன், கலியுகக் கற்பக விருட்சமாக காட்சி தருகிறார். கேட்ட வரம் தரும் தாய்க்கு தாயாகவும், காமதேனுவாகவும் அம்மன் திகழ்கிறார்.

இக் கோயிலில் 2000 ம் ஆண்டு செப்., 3 ம் தேதி 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கோயிலுக்கு கும்பாபிேஷகம் செய்தனர். அதற்கு பின் 24 ஆண்டு கழித்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1.27 கோடி செலவில் 3 நிலை ராஜகோபுரத்தை 7 நிலையாக உயர்த்தி கட்டியதோடு, கோயில் பிரகாரம், உற்ஸவ சுவாமிகள் புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆக. 22 ல் கும்பாபிேஷகம்


இக்கோயிலில் ஆக., 19 அன்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்குகிறது. அன்று மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

ஆக., 20 அன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெறும். ஆக., 21 அன்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.

ஆக., 22 அன்று காலை 5:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்குகிறது. காலை 8:00 மணி முதல் 9:15 மணிக்குள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.

அன்று மாலை 4:30 மணிக்கு மகா அபிேஷகம்,தீபாராதனை நடைபெறும். யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படும்.

பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன்தலைமையில் கோயில் ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us