/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விடுமுறை முடிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 07:34 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
கடந்த கல்வி ஆண்டிற்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் இறுதியில் முடிவடைந்தன. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்த கல்வியாண்டிற்கான வகுப்பு ஜூன்6ல் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜுன் 10க்கு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை மலர் துாவியும், ரோஜா மலர்கள்கொடுத்தும், மாலை அணிவித்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் உற்சாகம் காணப்பட்டது. கோடை விடுமுறையில் பள்ளி கட்டட பராமரிப்பு பணிகள் செய்தும் கடந்த ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள், கழிப்பறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை தலைமையாசிரியர்கள் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1117 அரசுப்பள்ளிகள், 234 அரசு உதவி பெறும் பள்ளிகள், 253 தனியார் பள்ளிகள் என மொத்தம் ஆயிரத்து 607 பள்ளிகளை சேர்ந்த 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர்.